சமரசத்திற்குப் பிந்தைய செயல்முறை
கடைசி சமரச அமர்விற்குப் பிறகு ஒரு மாத காலத்திற்குள் எங்கள் இணையவழி விண்ணப்பப் படிவத்தின்மூலம் நீங்கள் விருப்புரிமை மறு-சமரசத்திற்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் 1800 2255 529* என்ற சட்ட அமைச்சின் வினவல் எண்ணை அலுவலக நேரங்களில் அழைப்பதன் மூலமும் விண்ணப்பிக்கலாம்
அக்கம்பக்கத்தார் அல்லாதவருடனான சர்ச்சைகள்
விருப்புரிமை மறு-சமரசத்தில் தீர்வு காணப்படாத நிலையில், இந்தச் சர்ச்சையைத் தீர்ப்பதற்கான பிற வழிகளை நீங்கள் ஆராயலாம், அதில் சட்ட ஆலோசனையைப் பெறுவது அல்லது நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்வது ஆகியவை அடங்கும்.
தெம்பனிஸ் அக்கம்பக்கத்தாரின் சர்ச்சைகள் (தொடக்கக் கட்டத்தின்போது)
பிரதிவாதி பதிலளிக்க மறுப்பதாலோ அல்லது பதிலளிக்கத் தவறுவதாலோ விருப்புரிமை மறு-சமரசம் ஏற்படவில்லை என்றால், அலுவலக நேரங்களில் 1800 2255 529* என்ற சட்ட அமைச்சின் வினவல் எண்ணை அழைப்பதன் மூலம் நேரடி தீர்வுக்கு விண்ணப்பிக்கலாம். சமூக சமரச நிலையத்தின் சமசர அமர்வுவில் இருதரப்பினரும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.
மற்ற அனைத்து நகரங்களிலுள்ள அக்கம்பக்கத்தாரின் சர்ச்சைகள் (தொடக்கக் கட்டத்தின்போது)
பிரதிவாதி பதிலளிக்க மறுப்பதாலோ அல்லது பதிலளிக்கத் தவறுவதாலோ விருப்புரிமை மறு-சமரசம் ஏற்படவில்லை என்றால், இறுதி முடிவைத் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை உங்களுக்கு அனுப்புவோம். சமூக சர்ச்சை தீர்வு மன்றத்தில் (CDRT) கோரிக்கை தாக்கல் செய்ய உங்களுக்கு ஒரு விருப்பத்தேர்வு இருக்கும்.
*கைப்பேசிகளிலிருந்து செய்யப்படும் அழைப்புகளுக்கு ஏர்டைம் கட்டணங்கள் விதிக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.