சமூக சமரச நிலையத்தின் (CMC) சமரச நிபுணராக ஆவது எப்படி
சமூக சமரச நிலையம் ஒவ்வொரு ஆண்டும் புதிய தொண்டூழியர்களை நியமிக்கிறது, அதற்கான விண்ணப்பச் சமர்ப்பிப்பு செப்டம்பர் மாத இறுதியில் முடிவடைகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நவம்பர் வரை வழக்கமாக நடைபெறும் தேர்வு நேர்காணல்களில் கலந்துகொள்ள, நாங்கள் தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள்.
சமூக சமரச நிலையத்தின் சமரச நிபுணராகத் தகுதி பெறுவதற்கு 5-கட்டச் செயல்முறை உள்ளது:
-
விண்ணப்பம்
-
தேர்ந்தெடுப்பு
-
மதிப்பீடு
-
தொழிற்பயிற்சி
-
நியமனம்
தொண்டூழிய சமூக சமரச நிலையத்தின் சமரச நிபுணராக விண்ணப்பிக்க, நீங்கள் பின்வரும் தகுதி அளவுகோல்களைப் பூர்த்திசெய்ய வேண்டும்:
-
சிங்கப்பூரர் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசியாக இருக்க வேண்டும்.
-
30 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக இருக்க வேண்டும்.
-
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும் எழுதவும் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
-
உள்ளூர் மொழி அல்லது பேச்சுவழக்கில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
-
சமரசத்தை நடத்துவதற்கு ஜூம் தளத்தைப் பயன்படுத்தத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
-
சமூக அல்லது தொண்டூழியப் பணிகளில் தற்போது துடிப்புடன் ஈடுபடுபவராக அல்லது கடந்த காலத்தில் துடிப்புடன் ஈடுபட்டவராக இருப்பது முக்கியமாகும்.
-
கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் சிங்கப்பூர் அனைத்துலக சமரசக் கழகத்திடமிருந்து (SIMI) குறைந்தபட்சம் நிலை 1 அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
-
சிங்கப்பூரில் ஒரு கனிவான மற்றும் இணக்கமான சமூகத்தை உருவாக்கப் பங்களிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும்.
-
சிங்கப்பூரில் ஒரு கனிவான மற்றும் இணக்கமான சமூகத்தை உருவாக்கப் பங்களிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும்.