FAQs
செயல்பாட்டு விவரங்கள் - சமூக சமரச நிலையம் (CMC) குறித்த விவரங்கள்
சமூக சமரச நிலையம் (CMC) என்ன செய்கிறது?
சட்ட அமைச்சின் கீழ் செயல்படும் சமூக சமரச நிலையம் (CMC), உறவுமுறை சார்ந்த மற்றும் சமூகச் சர்ச்சைகளை சந்திக்கும் சிங்கப்பூர் குடியிருப்பாளர்களுக்கு சமரச சேவையை வழங்குகிறது.
இந்த சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.
சமரசத்தின் நன்மைகள் என்ன?
CMC-யில் நடைபெறும் சமரசம் பின்வரும் நன்மைகளை வழங்குகிறது:
-
செலவு: இந்த சேவை இலவசம்.
-
தனியுரிமை: சமரசத்தின் போது விவாதிக்கப்படும் விஷயங்கள் மற்றும் தரப்பினரின் அடையாளம் இரகசியமாக வைக்கப்படும்.
-
நேரம்: ஒரு சமரச அமர்வு வழக்கமாக சுமார் இரண்டு மணிநேரம் நடைபெறும். இது திங்கள் முதல் வெள்ளி வரை மற்றும் சனிக்கிழமைகளில் காலை நேரத்தில் நடைபெறும்.
-
இருப்பிடம்: நாங்கள் சட்ட அமைச்சின் சேவை நிலையத்தில் நேரில் சமரச சேவையையும், நாடு முழுவதும் உள்ள 18 தீவளாவிய சமரச இடங்களிலும் சேவையையும் வழங்குகிறோம். குறைந்த சிக்கலுடைய சர்ச்சைகளுக்கு மெய்நிகர் (இணையவழி) சமரச சேவையும் வழங்கப்படுகிறது.
CMC-யில் சமரசத்திற்காக விண்ணப்பிப்பதற்கு முன், நீங்கள் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
செயல்பாட்டு விவகாரங்கள் – சமரச முறைகள்
சமூக சமரச நிலையத்தில் (CMC) சமரசம் எங்கே நடைபெறுகிறது?
சமூக சமரச நிலையத்தின் (CMC) சமரசமானது 45 Maxwell Road, The URA Centre (East Wing), #07-11, Singapore 069118 என்ற முகவரியில் நடைபெறுகிறது.
நீதிமன்றம் பரிந்துரைத்த மற்றும் வழிநடத்தும் சமரசம் பின்வரும் நேரங்களில் நடைபெறுகிறது:
-
திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
தன்னார்வ சமரசம் பின்வரும் நேரங்களில் நடைபெறுகிறது:
-
திங்கள் முதல் வெள்ளி வரை, மதியம் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை
-
சனிக்கிழமைகளில், காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
ஞாயிற்றுக்கிழமைகளில் மற்றும் பொது விடுமுறைகளில் எங்கள் சேவை முடக்கப்பட்டிருக்கும்.
சட்ட அமைச்சின் சேவை நிலைத்தில் உள்ள சமூக சமரச நிலையத்தைத் தவிர, நாங்கள் 18 தீவளாவிய சமரச இடங்களில் தொண்டூழிய சமரசத்தையும் வழங்குகிறோம்:
-
ஏஸ் த பிளேஸ் சமூக மன்றம்
-
பிடோக் சமூக நிலையம்
-
சி யுவான் சமூக மன்றம்
-
கிளமெண்டி சமூக மன்றம்
-
கேலாங் செராய் சமூக மன்றம்@விஸ்மா கேலாங் செராய்
-
மெக்பர்சன் சமூக மன்றம்
-
நீ சூன் ஈஸ்ட் சமூக மன்றம்
-
பாய லேபார் கோவன் சமூக மன்றம்
-
தோ பாயோ வெஸ்ட் சமூக மன்றம்
-
தெலுக் பிளாங்கா சமூக மன்றம்
-
சர்வீஸ்எஸ்ஜி நிலையம் ஒன் பொங்கோல்
-
சர்வீஸ்எஸ்ஜி நிலையம் நமது தெம்பினிஸ் நடுவம்
-
சர்வீஸ்எஸ்ஜி@கியட் ஹொங் சமூக மன்றம்
-
சர்வீஸ்எஸ்ஜி நிலையம்@ஃபரண்ட்டியர் சமூக மன்றம்
-
சர்வீஸ்எஸ்ஜி நிலையம் புக்கிட் மேரா
-
சர்வீஸ்எஸ்ஜி நிலையம் உட்லண்ட்ஸ்
-
தெம்பினிஸ் ஈஸ்ட் அக்கம்பக்கக் காவல் சாவடி
-
தெம்பினிஸ் நார்த் அக்கம்பக்கக் காவல் சாவடி
Zoom மூலம் சமரசம் நடத்தப்படுமா?
குறைந்த சிக்கலுடைய வழக்குகளுக்கு, மெய்நிகர் (இணையவழி) சமரச சேவை வழங்கப்படலாம்.
செயல்பாடு சார்ந்த விவகாரங்கள் – சமூக சமரச நிலையத்தில் சமரசத்திற்கான விண்ணப்பத்தின் பொருத்தம்
சமூக சமரச நிலையத்தில் (CMC) சமரசத்திற்கு ஏற்ற சர்ச்சைகள் என்னென்ன?
அக்கம்பக்கத்தார், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள், வீட்டுவாடகையாளர், வீட்டு உரிமையாளர் அல்லது பிற நபர்களுடன் ஏற்படும் உறவுமுறை சார்ந்த சர்ச்சைகள் ஆகியவற்றுக்குத் தீர்வாக CMC-யில் சமரசம் ஒரு நல்ல விருப்பமாகும்.
எனினும், ஒப்பந்தம் சார்ந்த அல்லது வர்த்தக சார்ந்த சர்ச்சைகளுக்கு இது பொருத்தமானதல்ல.
CMC-யில் சமரசத்திற்கு ஏற்ற சர்ச்சைகளின் முழுமையான பட்டியலுக்காக, தயவுசெய்து இங்கேகிளிக் செய்க.
எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் சமரச விண்ணப்பத்தை சமூக சமரச நிலையம் ஏன் ஏற்றுக்கொள்கிறது?
CMC விசாரணைகளை மேற்கொள்வதில்லை. சர்ச்சைக்குரிய தரப்பினரிடையே விவாதங்களை எளிதாக்குவதே எங்களின் முதன்மையான நோக்கமாகும். சமரசம் மூலம், தரப்பினர் திறம்பட கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், தீர்வுகளை ஆராயவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒப்பந்தங்களை எட்டவும் உதவுவதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
தனியார் கூட்டுரிமை வீடு அல்லது தரை வீட்டில் அக்கம்பக்கத்தார் சர்ச்சைகள் தொடர்பான வழக்குகளை சமூக சமரச நிலையத்தில் ஏற்கப்படுமா?
தரை வீடுகள், கூட்டுரிமை வீடுகள் மற்றும் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளிட்ட பொது மற்றும் தனியார் குடியிருப்புப் பேட்டைகளில் அக்கம்பக்கத்தார் சர்ச்சைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
என் பிரதான வீட்டுவாடகையாளர் அல்லது வீட்டு உரிமையாளருடன் எனக்கு சர்ச்சை இருந்தால், CMC சமரசம் செய்யுமா?
வீட்டு உரிமையாளரும் வீட்டுவாடகையாளரும் அல்லது துணை-வாடகையாளர்களும் இடையே உள்ள ஒப்பந்தமில்லா சர்ச்சைகளுக்காக, நாங்கள் சமரச சேவையை வழங்குகிறோம்.
சமூக சமரச நிலையத்தில் வழக்குத் தொடர எனக்கு ஆதாரம் தேவையா?
சமூக சமரச நிலையத்தில் சமரசத்திற்கு விண்ணப்பிப்பதற்கு முன் நீங்கள் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
சமரச அமர்வில் எத்தனை பேர் கலந்து கொள்ளலாம்?
குடும்பச் சர்ச்சைகளைத் தவிர்த்து, சர்ச்சையில் நேரடியாக ஈடுபட்டுள்ள ஒவ்வொரு தரப்பினரில் இருந்தும் இரண்டு நபர்கள் வரை சமரச அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கிறோம். ஒரு தீவளாவிய சமரச அமர்வுக்கு, ஒவ்வொரு தரப்பில் இருந்தும் ஒருவர் மட்டுமே அமர்வில் கலந்துகொள்வார்.
என் சார்பாக எனது குடும்ப உறுப்பினர்கள்/முகவரை என்னால் சமரச அமர்வில் கலந்துகொள்ள வைக்க முடியுமா?
உங்கள் குடும்ப உறுப்பினர் அல்லது முகவருக்கு உங்கள் விவகாரங்களை நிர்வகிக்க பவர் ஆஃப் அட்டர்னி (பகராள் செயலுரிமைப் பத்திரம்) வழங்கப்பட்டிருந்தால், உங்கள் சார்பாக அவர்கள் அமர்வில் கலந்துகொள்ள நீங்கள் அங்கீகாரம் அளிக்கலாம். மற்ற எல்லா காரணங்களுக்காகவும், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும். நீதிமன்றத்தால் வழிகாட்டப்பட்ட சமரசத்திற்கு, நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினர் மட்டுமே சமரச அமர்வில் கலந்து கொள்வார்கள்.
என்னுடன் சமரசத்தில் கலந்துகொள்ள எனக்கு ஒரு வழக்குரைஞர் கிடைப்பாரா?
சமூக சமரச நிலையத்தில், வழக்குரைஞர்கள் இரு தரப்பினருடனும் சமரச அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. உங்களுக்கு சட்ட ஆலோசனை தேவைப்பட்டால், சமரச அமர்வுக்கு முன் அதைத் தனியாகப் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
செயல்பாடு சார்ந்த விவகாரங்கள் – சமூக சமரச நிலையத்தில் சமரசத்திற்கான விண்ணப்பம்
சமரசத்திற்கு விண்ணப்பித்த பிறகு என்ன நடக்கும்?
தன்னார்வ சமரசத்திற்கான உங்கள் விண்ணப்பம் சமூக சமரச நிலையத்தில் (CMC) பெறப்பட்டவுடன், பின்வரும் செயல்முறை மேற்கொள்ளப்படும்:
-
ஒப்புகை: உங்கள் சமரச விண்ணப்பத்திற்கான ஒப்புதல் அறிவிப்பை நீங்கள் பெறுவீர்கள்.
-
மதிப்பீடு: உங்கள் வழக்கு சமரசத்திற்கு பொருத்தமானதா என்பதைத் தீர்மானிக்க, நாங்கள் அதை மதிப்பீடு செய்வோம்.
-
மற்ற தரப்பிற்கு அழைப்பு (பிரதிவாதி): உங்கள் வழக்கு CMC-யில் சமரசத்திற்கு பொருத்தமானது என தீர்மானிக்கப்படின், நாங்கள் பிரதிவாதியை சமரசத்திற்கு அழைத்து, அவரிடமிருந்து பெறப்படும் பதிலை உங்களிடம் பகிர்வோம்.
-
நேரத்திட்டத்தை அமைத்தல்: இரு தரப்பினரும் சமரசத்தில் பங்கேற்பதற்கு ஒத்துக் கொண்டால், நாங்கள் அமர்வை திட்டமிட்டு, அதன் தேதி, நேரம் மற்றும் இடம் குறித்து உங்களுக்கு தெரிவிப்போம்.
-
சமரச அமர்வு: தேர்வுசெய்யப்பட்ட நாளில், நீங்களும் பிரதிவாதியும் எங்கள் சமரச நிபுணர்(களுடன்) சந்திப்பீர்கள். சமரச நிபுணர்(கள்) இரு தரப்புகளுக்கும் இடையில் ஒரு கருத்து பரிமாற்றத்தை எளிதாக்கி, நல்ல புரிதலும், வாய்ப்புள்ள சமாதான தீர்வும் ஏற்பட உதவுவார்கள்.
-
முடிவு: உடன்பாடு எட்டப்பட்டவுடன், எங்கள் சமரச நிபுணர்(கள்) விதிகளை ஆவணப்படுத்துவார்கள். கையொப்பமிடும் முன் அந்த ஆவணத்தை நீங்கள் மீளாய்வு செய்யும் வாய்ப்பு பெறுவீர்கள்.
நீங்கள் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தின் நகலையும் பெறுவீர்கள்.உடன்பாடு எட்டப்படவில்லை என்றால், அமர்வு மரியாதையுடன் முடிக்கப்படும்.
தகராறைத் தீர்க்கும் மற்ற விருப்பங்களை நீங்கள் ஆராயலாம், இதில் சட்ட ஆலோசனை பெறுவதோ அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதோ அடங்கும். -
தொடர்ந்து செயல்படுதல்: தேவைப்பட்டால், CMC தொடர்ச்சியான சமரச அமர்வுகளையும் வழங்கலாம்.
பிரதிவாதி சமூக சமரச நிலையத்தின் அழைப்பைப் புறக்கணித்தாலோ அல்லது நிராகரித்தாலோ, எனக்கு வேறு என்ன வழிகள் உள்ளன?
தன்னார்வ சமரசத்திற்கு, இரு தரப்பினரும் பங்கேற்கத் தயாராக இருக்கும்போது மட்டுமே, நாங்கள் ஒரு சமரச அமர்வுக்கு ஏற்பாடு செய்ய முடியும்.
அக்கம்பக்கத்தார் அல்லாதவருடனான சர்ச்சைகள்
பிரதிவாதி சமரச அழைப்பை நிராகரித்தாலோ அல்லது அதற்குப் பதிலளிக்கத் தவறினாலோ, இந்தச் சர்ச்சையைத் தீர்ப்பதற்கான பிற வழிகளை நீங்கள் ஆராயலாம், அதில் சட்ட ஆலோசனையைப் பெறுவது அல்லது நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்வது ஆகியவை அடங்கும்.
தெம்பனிஸ் அக்கம்பக்கத்தாரின் சர்ச்சைகள் (தொடக்கக் கட்டத்தின்போது)
பிரதிவாதி சமரச அழைப்பை நிராகரித்தாலோ அல்லது அதற்குப் பதிலளிக்கத் தவறினாலோ, வார நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, 3300 3300 என்ற நேரடித் தொலைப்பேசி எண்ணை அழைப்பதன் மூலம் சமூகத் தொடர்புகள் பிரிவின் (Community Relations Unit, CRU) உதவியை நீங்கள் நாடலாம்.
மற்ற அனைத்து நகரங்களிலுள்ள அக்கம்பக்கத்தாரின் சர்ச்சைகள் (தொடக்கக் கட்டத்தின்போது)
பிரதிவாதி பதிலளிக்க மறுத்தால் அல்லது பதிலளிக்கத் தவறினால், இறுதி முடிவைத் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை உங்களுக்கு அனுப்புவோம். சமூக சர்ச்சை தீர்வு மன்றத்தில் (CDRT) கோரிக்கை தாக்கல் செய்ய உங்களுக்கு ஒரு விருப்புரிமை இருக்கும்.
செயல்பாடு சார்ந்த விவகாரங்கள் - சமரச அமர்வு
சமரசத்தின் போது என்ன நடக்கிறது?
இது சமூக சமரச நிலையத்தின் (CMC) சமரசச் செயல்முறை:
பதிவுசெய்தல்: அமர்வு நேரத்திற்குக் குறைந்தது 20 நிமிடங்களுக்கு முன்பு வருகைதாரராகவும். எங்கள் அதிகாரி உங்களை வரவேற்று, தரப்பினரின் அடையாளங்களைச் சரிபார்த்து, சமரச அமர்வு தொடங்குவதற்கு முன் அனைத்தும் ஒழுங்காக இருப்பதை உறுதி செய்வார்.
தொடக்க அறிவிப்பு: எங்கள் சமரச நிபுணர்(கள்) உங்களையும்
மற்ற தரப்பினரையும் சமரச அறைக்கு அழைப்பார்கள். அங்கு நீங்கள் இருவரும் அமர்வீர்கள்.
பின்னர் சமரச நிபுணர்(கள்) சமரச செயல்முறை மற்றும் சில அடிப்படை விதிகளை
விளக்கும் தொடக்க அறிவிப்புடன்அமர்வைத் தொடங்குவார்கள்.
கூட்டு அமர்வு: விண்ணப்பதாரர், சமரசத்திற்கு கொண்டுவரப்பட்ட
சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகளை பகிர்ந்து கொள்வதன் மூலம்ஆரம்பிப்பார். பின்னர்
பிரதிவாதிக்கு பதிலளிக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
எங்கள் சமரச நிபுணர்(கள்) முக்கியமான விவகாரங்களை சுருக்கமாக தொகுத்து விளக்குவார்கள்.
தனிப்பட்ட அமர்வு: சில நுணுக்கமான அல்லது உணர்வுப்பூர்வமான
விவகாரங்கள் தனியாக விவாதிக்கப்பட வேண்டியிருப்பின், சமரச நிபுணர்(கள்) ஒவ்வொரு
தரப்பினருடனும் தனித்தனியாகப் பேசலாம்.
தனிப்பட்ட அமர்வில் பகிரப்படும் தகவல்கள் இரகசியமாக வைக்கப்படும், அத்தகைய
தகவலை வெளியிட அனுமதி அளிக்கப்படாத வரை.
எங்கள் சமரச நிபுணர்(கள்), இரு தரப்புகளுடனும் வெவ்வேறு தீர்வுகளை ஆராய, கூட்டு மற்றும் தனிப்பட்ட அமர்வுகளை மாறிமாறி நடத்தலாம்.
இறுதியாக:
ஒப்பந்தத்துடன் முடிவு அடைவது (Settlement with an agreement)
உடன்பாடு எட்டப்பட்டவுடன், எங்கள் சமரச நிபுணர்(கள்) அந்த உடன்பாட்டின் விதிகளை
ஆவணப்படுத்துவார்கள்.
நீங்கள் கையொப்பமிடும் முன் அந்த ஆவணத்தை மீளாய்வு செய்யும் வாய்ப்பு பெறுவீர்கள்.
கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின் நகலும் உங்களுக்கு வழங்கப்படும்.
உடன்பாடு எட்டப்படாமல் இருப்பது (No settlement)
ஒரு உடன்பாட்டை எட்ட முடியாவிட்டால், நாங்கள் அமர்வை மரியாதையுடன் முடிப்போம்.
இந்தச் சர்ச்சையைத் தீர்ப்பதற்கான மற்ற விருப்பங்களை, உதாரணமாக சட்ட ஆலோசனை
பெறுதல் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தல் போன்றவற்றை, நீங்கள்
ஆராயலாம்.
நான் சமரச அமர்வைப் பதிவு செய்யலாமா?
சமூக சமரச நிலைய சட்டம், பிரிவு 49A -இல் விவரிக்கப்பட்டுள்ளபடி, சமூக சமரச நிலையத்தில் செய்யப்படும் சமரசம் என்பது ஓர் இரகசிய செயல்முறையாகும். இரகசியத்தன்மையைப் பேணுவதற்கும், தரப்பினர் பயமின்றி தகவல்களைப் பகிர்ந்து கொள்ள பாதுகாப்பான இடத்தை வழங்குவதற்கும், சமரச அமர்வின் போது புகைப்படம் எடுக்க, காணொளிப் பதிவு செய்ய அல்லது ஆடியோ பதிவு செய்ய அனுமதியில்லை. பதிவாக்கம் நடந்திருப்பது எங்களுக்குத் தெரியவந்தால், சமரச நிபுணர்கள் அல்லது சமூக சமரச நிலைய அதிகாரி முன்னிலையில், அத்தகைய உள்ளடக்கத்தை நீக்குமாறு பொறுப்பான தரப்பினரிடம் கேட்டுக்கொள்ளப்படும்.
சமூக சமரச நிலையத்தின் தீர்வு ஒப்பந்தம் சட்டப்படி கட்டுப்படுத்துகிறதா?
ஒரு தீர்வு ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், அதில் கையொப்பமிட்ட தரப்பினரை அது கட்டுப்படுத்தும், அதாவது சட்ட வழக்கு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நீங்கள் அந்த ஒப்பந்த ஆவணத்தை ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.
செயல்பாட்டு விவகாரங்கள் – சமரசத்திற்குப் பிந்தைய செயல்
மற்ற தரப்பு ஒப்பந்தத்தை மீறினால் என்ன நடக்கும்?
கடைசி சமரச அமர்விற்குப் பிறகு ஒரு மாத காலத்திற்குள் எங்கள் இணையவழி விண்ணப்பப் படிவத்தின் மூலம் நீங்கள் விருப்புரிமை மறு-சமரசத்திற்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் 1800 2255 529* என்ற சட்ட அமைச்சின் வினவல் எண்ணை அலுவலக நேரங்களில் அழைப்பதன் மூலமும் விண்ணப்பிக்கலாம்
அக்கம்பக்கத்தார் அல்லாதவருடனான சர்ச்சைகள்
விருப்புரிமை மறு-சமரசத்தில் தீர்வு காணப்படாத நிலையில், இந்தச் சர்ச்சையைத் தீர்ப்பதற்கான பிற வழிகளை நீங்கள் ஆராயலாம், அதில் சட்ட ஆலோசனையைப் பெறுவது அல்லது நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்வது ஆகியவை அடங்கும்.
தெம்பனிஸ் அக்கம்பக்கத்தாரின் சர்ச்சைகள் (தொடக்கக் கட்டத்தின்போது)
பிரதிவாதி பதிலளிக்க மறுப்பதாலோ அல்லது பதிலளிக்கத் தவறுவதாலோ விருப்புரிமை மறு-சமரசம் ஏற்படவில்லை என்றால், அலுவலக நேரங்களில் 1800 2255 529* என்ற சட்ட அமைச்சின் வினவல் எண்ணை அழைப்பதன் மூலம் நேரடி தீர்வுக்கு விண்ணப்பிக்கலாம். சமூக சமரச நிலையத்தின் சமசர அமர்வுவில் இருதரப்பினரும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.
மற்ற அனைத்து நகரங்களிலுள்ள அக்கம்பக்கத்தாரின் சர்ச்சைகள் (தொடக்கக் கட்டத்தின்போது)
பிரதிவாதி பதிலளிக்க மறுப்பதாலோ அல்லது பதிலளிக்கத் தவறுவதாலோ விருப்புரிமை மறு-சமரசம் ஏற்படவில்லை என்றால், இறுதி முடிவைத் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை உங்களுக்கு அனுப்புவோம். சமூக சர்ச்சை தீர்வு மன்றத்தில் (CDRT) கோரிக்கை தாக்கல் செய்ய உங்களுக்கு ஒரு விருப்பத்தேர்வு இருக்கும்.
*கைப்பேசிகளிலிருந்து செய்யப்படும் அழைப்புகளுக்கு ஏர்டைம் கட்டணங்கள் விதிக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
தொண்டூழியர் நிர்வாக விவகாரங்கள்
சமூக சமரச நிலையத்தின் (CMC) சமரச நிபுணர்கள் யார்?
சமூக சமரச நிலையத்தின் சமரச நிபுணர்கள், சட்ட அமைச்சரால் நியமிக்கப்படும் தொண்டூழியர்கள் ஆவர்.
அவர்கள் தங்களின் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன், கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு,
பயிற்சி அளிக்கப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் தங்கள் பங்கு தொடர வல்லவர்களாக இருக்க, வழக்கமான சமரசங்களிலும்,
தொடர்ச்சியான பயிற்சிகளிலும் பங்கேற்க求ப்படுகிறார்கள்.
சமூக சமரச நிலையம் புதிய தொண்டூழியர்களை நியமிக்கிறதா?
சமூக சமரச நிலையம் ஒவ்வொரு ஆண்டும் புதிய தொண்டூழியர்களை நியமிக்கிறது, அதற்கான விண்ணப்பச் சமர்ப்பிப்பு செப்டம்பர் மாத இறுதியில் முடிவடைகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நவம்பர் வரை வழக்கமாக நடைபெறும் தேர்வு நேர்காணல்களில் கலந்துகொள்ள, நாங்கள் தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள்.
சமூக சமரச நிலையத்தின் (CMC) சமரச நிபுணராகத் தகுதி பெறுவது எப்படி?
தகுதி பெறுவதற்கான செயல்முறை ஐந்து கட்டங்களைக் கொண்டுள்ளது:
-
விண்ணப்பம்
-
தேர்வு
-
மதிப்பீடு
-
தொழிற்பயிற்சி
-
நியமனம்
இங்கே கிளிக் செய்து நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
சமூக சமரச நிலையத்தின் (CMC) சமரச நிபுணராக ஆவது எப்படி?
CMC தொண்டூழிய சமரச நிபுணராக விண்ணப்பிக்க, நீங்கள் பின்வரும் தகுதிகள் மற்றும்
நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:
-
சிங்கப்பூர் குடியுரிமை உடையவராக அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசியாக இருக்க வேண்டும்
-
30 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்
-
ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் சரளமாக இருக்க வேண்டும்
-
உள்ளூர் மொழி அல்லது பேச்சுவழக்கில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
-
சமரசத்தை நடத்துவதற்கு ஜூம் தளத்தைப் பயன்படுத்தத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
-
சமூக அல்லது தொண்டூழியப் பணிகளில் தற்போது துடிப்புடன் ஈடுபடுபவராக அல்லது கடந்த காலத்தில் துடிப்புடன் ஈடுபட்டவராக இருப்பது முக்கியமாகும்.
-
கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் சிங்கப்பூர் அனைத்துலக சமரசக் கழகத்திடமிருந்து (SIMI) குறைந்தபட்சம் நிலை 1 அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
-
சிங்கப்பூரில் ஒரு கனிவான மற்றும் இணக்கமான சமூகத்தை உருவாக்கப் பங்களிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.
ஊடகங்கள் மற்றும் சமூக விவகாரங்கள்
சமூக சமரச நிலையத்திடம் ஒரு விளக்கத்தை நான் கோர விரும்புகிறேன்.
1800 2255* 529 என்ற சட்ட அமைச்சின் வினவல் தொலைபேசி எண்ணை அலுவலக நேரங்களில் அழைக்கவும் அல்லது இங்கே உள்ள இணையவழிப் படிவத்தைப் பயன்படுத்தி உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். *கைப்பேசிகளிலிருந்து செய்யப்படும் அழைப்புகளுக்கு ஏர்டைம் கட்டணங்கள் விதிக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
சமூக சமரச நிலையத்தின் ஆண்டு அறிக்கைகளை நான் எங்கே பெறலாம்?
சமூக சமரச நிலையம் (CMC) ஆண்டு அறிக்கைகளை வெளியிடவில்லை. நீங்கள் குறிப்பிட்ட வகையான புள்ளிவிவரங்களை விரும்பினால், தயவுசெய்து இங்கே உள்ள இணையவழி படிவத்தைப் பயன்படுத்தி உங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.
நான் ஒரு ஊடக நேர்காணலை நடத்த விரும்புகிறேன்.
1800 2255 529* என்ற சட்ட அமைச்சின் வினவல் தொலைபேசி எண்ணை அலுவலக நேரங்களில் அழைக்கவும் அல்லது இங்கே உள்ள இணையவழிப் படிவத்தைப் பயன்படுத்தி உங்கள் கோரிக்கையின் தன்மை மற்றும் நோக்கத்தைக் குறிப்பிட்டு உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். *கைப்பேசிகளிலிருந்து செய்யப்படும் அழைப்புகளுக்கு ஏர்டைம் கட்டணங்கள் விதிக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
ஒரு நிகழ்வில் சமூக சமரச நிலையத்துடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன். அதற்கு நான் யாரிடம் பேச வேண்டும்?
1800 2255 529* என்ற சட்ட அமைச்சின் வினவல் தொலைபேசி எண்ணை அலுவலக நேரங்களில் அழைக்கவும் அல்லது இங்கே உள்ள இணையவழிப் படிவத்தைப் பயன்படுத்தி உங்கள் கோரிக்கையின் தன்மை மற்றும் நோக்கத்தைக் குறிப்பிட்டு உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். *கைப்பேசிகளிலிருந்து செய்யப்படும் அழைப்புகளுக்கு ஏர்டைம் கட்டணங்கள் விதிக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
சமூக சமரச நிலையத்தின் புள்ளிவிவர அறிக்கையை நான் எங்கே பெறலாம்?
சமூக சமரச நிலையம் புள்ளிவிவர அறிக்கைகளை வெளியிடவில்லை. நீங்கள் குறிப்பிட்ட வகையான புள்ளிவிவரங்களை விரும்பினால், தயவுசெய்து இங்கே உள்ள இணையவழி படிவத்தைப் பயன்படுத்தி உங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.
எனது நிறுவனம் சமூக சமரச நிலையத்தின் தகவல் பிரசுரங்களைக் கோர விரும்புகிறது.
1800 2255 529* என்ற சட்ட அமைச்சின் வினவல் தொலைபேசி எண்ணை அலுவலக நேரங்களில் அழைக்கவும் அல்லது இங்கே உள்ள இணையவழிப் படிவத்தைப் பயன்படுத்தி உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். *கைப்பேசிகளிலிருந்து செய்யப்படும் அழைப்புகளுக்கு ஏர்டைம் கட்டணங்கள் விதிக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
*இந்தப் பக்கக் காட்சி வெவ்வேறு உலாவிகளுக்கு இடையில் மாறுபடலாம்.