CMC செயல்முறை
உங்கள் வழக்கு CMC-யில் பதிவு முதல் தீர்வு வரை எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிக.
பதிவுசெய்தல்
அமர்வு நேரத்திற்குக் குறைந்தது 20 நிமிடங்களுக்கு முன்பே வருகைத் தந்திடுங்கள். எங்கள் அதிகாரி உங்களை வரவேற்று,
தரப்பினரின்அடையாளங்களைச் சரிபார்த்து, சமரச அமர்வு தொடங்குவதற்கு முன்பு எல்லாம் ஒழுங்காக இருப்பதை உறுதிசெய்வார்.
தொடக்க அறிவிப்பு
எங்கள் சமரச நிபுணர்(கள்) உங்களையும் மற்ற தரப்பினரையும் சமரச அறைக்கு அழைப்பார்கள். அங்கு நீங்களும் பிரதி தரப்பும் அமர வைக்கப்படுவீர்கள். பின்னர் சமரச நிபுணர்(கள்) ஒரு தொடக்க அறிவிப்புடன் தொடங்குவார்கள், அதில் சமரசச் செயல்முறை பற்றிய விளக்கமும் சில அடிப்படை விதிகளும் இடம்பெறும்.
கூட்டு அமர்வு
விண்ணப்பதாரர் சமரசத்திற்காக வந்துள்ள தனது பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தொடங்குவார். பின்னர் பிரதிவாதிக்குப் பதிலளிக்க வாய்ப்பு கொடுக்கப்படும். எழுப்பப்பட்ட முக்கியப் பிரச்சினைகளைச் சுருக்கமாகக் கூற எங்கள் சமரச நிபுணர்(கள்) உதவுவார்கள்.
தனிப்பட்ட அமர்வு
தனிப்பட்ட கலந்துரையாடல் தேவைப்படும் முக்கியமான விவகாரங்கள் இருந்தால், சமரச நிபுணர்(கள்) ஒவ்வொரு தரப்பினருடனும் தனித்தனியாகப் பேசலாம். தனிப்பட்ட அமர்வின் போது
வெளிப்படுத்தப்படும் விவகாரங்கள், அத்தகைய தகவல்களை வெளியிட அனுமதி வழங்கப்படும் வரை இரகசியமாக வைத்துக்கொள்ளப்படும்.
எங்கள் சமரச நிபுணர்(கள்) இரு தரப்பினருடம் வெவ்வேறு தீர்வுகளைக் கலந்து பேசும் பொருட்டு, கூட்டு மற்றும் தனிப்பட்ட அமர்வுகளை மாற்றி மாற்றி நடத்தலாம்.
இறுதி முடிவு
ஒப்பந்தத்துடனான தீர்வு
உடன்பாடு எட்டப்பட்டவுடன், எங்கள் சமரச நிபுணர்(கள்) விதிமுறைகளை ஆவணப்படுத்துவார்கள். கையொப்பமிடுவதற்கு முன்பு ஆவணத்தை மீளாய்வு செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின் நகல் ஒன்றையும் பெறுவீர்கள்.
உடன்பாடு எட்டப்படவில்லை
ஒரு உடன்பாட்டை எட்ட முடியாவிட்டால், நாங்கள் அமர்வை மரியாதையுடன் முடிப்போம். இந்தச் சர்ச்சையைத் தீர்ப்பதற்கான பிற வழிகளைப் பற்றி நீங்கள் ஆராயலாம், அதில் சட்ட ஆலோசனையைப் பெறுவது அல்லது நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்வது ஆகியவை அடங்கும்.
.png)