SIMI QAP

சிங்கப்பூர் அனைத்துலக சமரசக் கழகத்தின் (SIMI) தகுதிபெறும் மதிப்பீட்டு வழங்குநராக (QAP) சமூக சமரச நிலையமானது, எங்கள் சமரசப் பயிற்சி மற்றும் மதிப்பீடு சிங்கப்பூர் அனைத்துலக சமரசக் கழகத்தின் தரநிலைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறது.
சமூக சமரச நிலையத்தில் சேரும் அனைத்துப் புதிய தொண்டூழிய சமரச நிபுணர்களும், எங்கள் தேர்வுக் குழுவிற்குப் பரிசீலிக்கப்படுவதற்கு முன்பு, உயர் சமரசத் தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்ய சிங்கப்பூர் அனைத்துலக சமரசக் கழகத்திடமிருந்து குறைந்தபட்சம் நிலை 1 அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும்.